தென்செய்தி
தமிழீழ இனப்படுகொலை நாள் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:35

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழ இனப்படுகொலை 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 18/5/16 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம. நடராசன், தஞ்சை. அ. இராமமூர்த்தி, பேரா. திருமாறன், சி. முருகேசன், வைத்தியநாதன், மரு. பாரதிசெல்வன், ஜான். கென்னடி, வீரசிங்கம், கும்பலிங்கம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
நூல் மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:25

திருவள்ளுவரின் நெஞ்சம் - (மா. அர்த்தனாரி)

மனிதர்களின் அறிவுப் புதையலைத் திறந்து வைக்கும் சக்தி வாய்ந்த "மந்திரக்கோல்' திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்றால் அது மிகையாகாது. அத்தகைய பெருமையையும், சிறப்பையும் பெற்ற திருக்குறளுக்கு அன்றிலிருந்து இன்று வரை பல தமிழறிஞர்கள் பல உரைகளை தந்து கொண்டே உள்ளனர். அதில், புதிதாக ஏதோ உரை எழுதிவிடலாம் என்று எண்ணாமல் எளிதாக, புரியும்படியாக தெளிவாக உழைக்கும் வர்க்கத்தினர் வாசிப்பதற்கு ஏற்றாற்போல் நல்ல தமிழில், பொருள் விளங்க உரை எழுதியிருக்கும் அய்யா அர்த்தனாரி அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவராகிறார்.

 
14 ஆண்டு கால பொய் வழக்கு பரந்தாமன் விடுதலை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:24

2002ஆம் ஆண்டு தலைவர் பழ.நெடுமாறன் பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது அவருடன் தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்களும் கைது செய்யப்பட்டார். பின்னர் "பொடா' மறு ஆய்வுக் குழுவின் ஆணையின் பேரில் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.

 
கேடாக முடிந்த நட்பு மீண்டும் கூடியது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:26

2014ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசைக் குற்றம் சாட்டி "கூடா நட்பு கேடு தரும்'' என்று கூறி காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் தி.மு.க. விலகியது.

இரண்டாண்டுகள் கழிவதற்குள் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூடா நட்பு மீண்டும் கூடிய நட்பாக மாறிவிட்டது.

 
"தேசம்" வடசொல்லே" - புலவர் சு. முருகேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:17

தமிழ் மொழியில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். "தொல்காப்பிய எச்சவியல் நூற்பா 397--இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுளீட்டச் சொல்லே.''

திங்கட்கிழமை, 23 மே 2016 12:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்121122123124125126127128129130அடுத்ததுமுடிவு»

பக்கம் 121 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.