|
இந்திய மருத்துவக் கழகம் கலைப்பு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் திட்டம் மருத்துவத் துறையைத் தனியார் மயமாக்க முயற்சி? - மரு. ஜி.ஆர்.இரவீந்திரநாத் |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:29 |
இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.ஐ.) - பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பான மசோதாவை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் தாக்கல்செய்திருக்கிறார். நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவர்களும் அரசு மருத்துவர்களும் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் பின்னிருக்கும் நோக்கம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
|
முனைவர் மலையமானின் தமிழ் ஆய்வு முடிவுகள் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:58 |
1. கந்தருவர் என்பவர் தேவர் இனத்தவர் என்பது தவறு. வடபுலத்தில் உலவிய தொல்பழம் யாழ்ப்பாணர்களே கந்தருவர். 2. ஆதிகாலத்து மாபெரும் வீரனாகிய முருகன் இறைவனாக வணங்கும் நிலையைப் பெற்றான். 3. தொடக்க நிலையில் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்தன. பின்பு அது 31 எழுத்துகளைக் கொண்டதாகத் திட்டமிட்டு நிறுவப்பட்டது. குறில், நெடில், மெய் எழுத்தின் மூன்று இனங்கள் ஆகியவையும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. 4. மூன்று இன முக்கிய மெய் எழுத்துக்களுடன் (த், ம், ழ்) மூன்று முக்கிய உயிர் எழுத்துகளை (அ, இ, உ) இணைத்துத் "தமிழு' என்று மொழிக்குப் பெயர் சூட்டப்பட்டது. பின்பு இறுதி உகரம் மறைந்தது. தமிழ் என்று சொல் நிலைத்தது. 5. உலக மொழிகளில் தமிழில் தான் ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ளன (64 சொற்கள்).
|
|
குமரிக் கரையில் கதறும் குடும்பங்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 12:02 |
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ளது. இக்கடற்கரை நெடுகிலும் 308 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. கடல் சார் மீன்பிடித்தலில் நான்காவது இடத்தையும் (12.9%) உள்நாட்டு மீன் பிடித்தலில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ள தமிழகத்தில் 5,180 ச.கி.மீட்டர் பரப்பில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது. சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மண்டபம், கன்னியாகுமரி போன்றவை முக்கிய மீன்பிடித் துறைமுகங்களாகும். தமிழ்நாட்டில் இராமேசுவரம் முதல் ஆந்திர மாநிலத்தின் கஞ்சம் வரையிலும், ஜüலை முதல் அக்டோபர் வரையிலும் மீன்பிடிக் காலமாகவும், சோழ மண்டலக் கரையில் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை மீன்பிடிக் காலமாகவும் உள்ளது.
|
கவிஞர் இன்குலாபின் "ஒளவை' நாடகம் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:54 |
கவிஞர் இன்குலாபின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேராசிரியர் அ. மங்கையின் இயக்கத்தில் இன்குலாபின் "ஒளவை' நாடகம் மேடையேற்றப்பட்டது.
"புத்தி சொல்லும் எந்தப் பெண்ணும் எந்த வயதிலும் பாட்டிதான்'' என்ற ஒற்றை வாக்கியத்துடன், தமிழ்ச் சமூகத்தின் பொது மனத்தில் பதியவைத்து, ஒளவை பற்றி கற்பிக்கப்பட்டிருக்கும் ஒற்றைப்படிமத்தை கலைத்து, சங்க ஒளவையை இனக்குழுப் பண்பாட்டின் பெரும் துடிப்பும் விடுதலையும் கொண்ட பேராற்றலாய்ப் புதுப்பித்துக் காட்டும் அற்புதப் படைப்பு இந்நாடகம்.
|
|
|
|
|
பக்கம் 74 - மொத்தம் 132 இல் |