|
சேலம் எஃகு ஆலையைத் தனியார் மயமாக்காதே! - பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:45 |
உயர்தரமான எஃகு தயாரிப்பில் உலக அளவில் புகழ் வாய்ந்தது சேலம் உருக்காலையாகும். தமிழ்நாட்டின் பெருமை மிகுந்த அடையாளமாக அது திகழ்ந்து வருகிறது.
சேலம் எஃகு ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் அதன் அருகிலேயே கிடைக்கின்றன என்பது சிறப்பானதாகும். தரமான இரும்புத் தாது இம்மாவட்டத்திலேயே கிடைக்கிறது. இந்த இரும்புத் தாது குறைவான அளவுக்கு சல்பர் மற்றும் பாஸ்பரஸ் கொணடிருப்பதால் சிறந்த உயர் தரமான எஃகு இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. எஃகு உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல்லும், டோலமைட்டும் சேலம் மாவட்டத்திலேயே கிடைக்கின்றன.
|
கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது ஏற்க குடும்பத்தினர் மறுப்பு |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:10 |
இந்தியாவில் 24 மொழிகளில் வெளி யாகும் சிறந்த இலக்கியப் படைப்பு களைத் தேர்வு செய்து "சாகித்ய அகாடமி' சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படு கின்றன. அதன்படி, தமிழ் மொழிக்கான விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
|
|
வெண்மணி கொடுந்துயரம் - 50 |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:26 |
1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் தமிழக வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத இரத்தக் கறை படிந்த நாளாகும்.
காவிரி பாய்ந்தோடி வளங்கொழிக்கச் செய்யும் தஞ்சை சமவெளி வெண்மணியில் 19 குழந்தைகள் உள்பட 44 பேர் பதறப் பதற தீயில் கருகி மாண்டு மடிந்தனர். ஒரு மூட்டை நெல்லுக்கு ஒரு படி நெல் மட்டுமே உழவுத்தொழிலாளர்களுக்கு கூலியாக வழங்கப்பட்டது. மேலும் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடியதைப் பொறுக்க முடியாத நில உரிமையாளர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். ஒரே குடிசைக்குள் தஞ்சம் புகுந்த 44 பேரையும் உயிரோடு கொளுத்தினார்கள். சாதி ஆணவமும் இதற்குக் காரணமாகும்.
|
உழவர் ஞானசேகரன் படுகொலை: அனைத்துக்கட்சிகள் - விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் பல்லாயிரவர் திரண்டனர் |
|
|
|
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:23 |
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன், சாத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் விவசாயக் கடன் பெற்றிருந்தார். இக்கடனை வசூலிக்கச் சென்ற வங்கியின் அடியாட்களால் கடந்த 04/11/2017 அன்று தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
வங்கியின் அடியாட்களைக் காப்பாற்றும் நோக்கில் மாவட்டக் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கைப் பதிவு செய்ததைக் கண்டித்தும் கொலை வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளான வங்கியின் கிளை மேலாளர் ஜெயராஜ், அடியாட்களான ராஜா என்கிற ரமேஷ், வெங்கடபதி ஆகியோரைக் கைது செய்யக்கோரியும் ஞானசேகரனின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் 09/12/2017 அன்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 75 - மொத்தம் 132 இல் |