காமன்வெல்த் போட்டி நிறைவு விழா : சிறப்பு அழைப்பாளராக இராசபக்சே - இந்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2010 21:12 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவுவிழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபக்சேயை இந்திய அரசு அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
|
சோனியா வருகை! நூற்றுக்கணக்கானவர்கள் கைது - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை |
|
|
|
சனிக்கிழமை, 09 அக்டோபர் 2010 21:10 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி திருச்சி வருவதையொட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட தமிழ்நாடெங்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி கைதுசெய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி வற்புறுத்துகிறேன். |
கோயில், மசூதி ஆகியவற்றை மத்தியஅரசே கட்ட வேண்டும்! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2010 21:06 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று சமபாகங்களாகப் பிரித்து இந்து மகாசபை, நிர்மோகி அகாடா, சன்னி வஃக்ப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுமார் 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில் மத சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
|
|
விடுதலைப்புலிகள் மீதான தடை தீர்ப்பாயத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் - வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடினார் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 அக்டோபர் 2010 21:07 |
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5-10-2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார்.
|
தமிழ்நாட்டில் சீனத் தொழிற்சாலையா? - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை |
|
|
|
வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2010 21:05 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் சென்னை அருகே 2300 கோடி ரூபாய் முதலீட்டில் தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைப்பதற்கான உடன்பாட்டில் தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டிருக்கிறார்.
|
|
|
|
|
பக்கம் 24 - மொத்தம் 44 இல் |