அறிக்கைகள்
கேரளத்தின் காலங்கடத்தும் தந்திரம் வெற்றிபெற்றுவிட்டது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010 18:25
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் தனக்கு ஆதரவாக திருப்புவதிலும், காலங்கடத்தும் தந்திரத்திலும் மீண்டும் கேரளம் வெற்றிபெற்றுவிட்டது. 30 ஆண்டு காலத்திற்கு மேலாக மத்திய அரசு உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தமிழக விவசாயிகள் தரப்பின் நியாயத்தினை எடுத்துக்கூறி நீதி கிடைக்கச் செய்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பதையே உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
 
அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010 15:47
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
முத்துக்குமார் வீரவணக்க நாள் கொண்டாடுக PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2010 15:44
பழ. நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்
ஈழத்தமிழர்களின் துயரத்தை இந்திய#தமிழக அரசுகளுக்கு உணர்த்துவதற்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த முத்துக்குமார் அவர்களின் முதலாண்டு நினைவு நாள் ஜனவரி 29ஆம் தேதி வரவிருக்கிறது. முத்துக்குமாரின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 14 பேரும் வெளிநாடுகளில் மூன்று பேரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
 
கல்விக்கொள்ளை அடித்த அரசியல் குடும்பங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 ஜனவரி 2010 15:46
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்ட குழு இந்தியாவில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
பொங்கல் திருநாள் துக்கநாள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 11 ஜனவரி 2010 15:43
உலகத் தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்
தமிழர் திருநாளான பொங்கல் பெருநாள் இவ்வாண்டு தமிழர்களுக்கு மிகத் துயரமான காலகட்டத்தில் வந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத வகையில் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு மூன்று இலட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு
 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 30 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.