ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு ஆதாரங்களை அனுப்புக! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2010 21:22 |
இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக 22-06-10 அன்று ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களிடமிருந்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் மேலதிக விவரங்களையும் பெறவிரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
|
|
மாவீரர் நாள் கொண்டாடுக! - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 20 நவம்பர் 2010 21:21 |
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தலைவர் நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. இலங்கையில் தமிழர் மண்ணை மீட்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெற்ற போரில் உயிர்த்தியாகம் செய்த மானமறவர்களை நினைத்து வணங்குவதற்காக மாவீரர் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாவீரர் நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
|
காவிரியில் தண்ணீர் விட மறுப்பு கருநாடகத்தின் அடாவடிப்போக்குக்கு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 28 அக்டோபர் 2010 21:15 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் காவிரிச் சமவெளிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பாப் பயிர்கள் போதுமான தண்ணீர் கிடைக்காததால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக முதல்வர் கருணாநிதி கருநாடக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருநாடக அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்க மறுத்திருக்கிறது.
|
|
புலிகள் மீதான தடை நீடிப்பு - நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2010 21:18 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ளத் தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாகத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் எதிர்த்தரப்புக்கு அளிக்கப்படவில்லை. அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகக் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
|
தாய்லாந்தில் தமிழ் அகதிகள் கைது அடைக்கலம் கொடுக்க நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2010 21:13 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் உயிர் வாழமுடியாத நிலைமையில் அங்கிருந்து தப்பித் தாய்லாந்துக்குச் சென்ற 130 ஈழத்தமிழர்களைத் தாய்லாந்து அரசு கைது செய்துள்ளது. இவர்களில் 60 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள்.
|
|
|
|
|
பக்கம் 23 - மொத்தம் 44 இல் |