அறிக்கைகள்
முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாண்டு நினைவு நாள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 13 மே 2010 18:48
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையால் பதறபதறப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேலான ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரின் முதலாண்டு நினைவு நாள் 17-05-10 அன்று வர இருக்கிறது. நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில் இதுபோன்ற மிகக்கொடுமையான நிகழ்ச்சி நடந்ததேயில்லை. இந்த நாளை நினைவில் நிறுத்தி கொல்லப்பட்ட நமது மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
 
சையத் அலி ஷா கிலானி கைதுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 மே 2010 18:47
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கொடுத்துள்ள அறிக்கை
அகில் இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்கள் நேற்று ஜம்முவில் மத்திய காவல்படையினர் கைது செய்து அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
மக்களைக் குழப்ப கருணாநிதி முயற்சி - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010 18:43
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முறையான அனுமதி பெற்று சென்னை வந்த பார்வதி அம்மையாரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதைப் போல தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர் நடுவிலும் இந்நிகழ்ச்சி கொதிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புவதற்கு முயற்சி செய்கிறார்.
 
இராசபக்சே கையால் விருது பெறுவதா? - இந்தியத் திரையுலகிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2010 18:45
இலங்கையில் சூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் விளம்பரத்தூதராக நடிகர் அமிதாப் பச்சன் இருந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவை இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபக்சே தலைமையில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்குரிய விருதுகளை இராசபக்சே வழங்குவார்.
 
பிரபாகரனின் தாயார் தமிழகத்தில் நுழைய அனுமதி மறுப்பு - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2010 18:41
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிட்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு இன்று (16-ஏப்ரல்-2010) இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.
 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 28 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.