ஆட்சி அதிகாரம் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் |
|
|
|
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:15 |
பா.ஜ.க. ஆட்சியில் எந்த அதிகாரப் பொறுப்பிலும் இல்லாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகத், தலைமையமைச்சருக்கும் மேலான அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.
6-10-17 அன்று டெல்லியில் மத்திய பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களையும் பொதுத் துறையில் உள்ள நிறுவனங்களின் தலைவர்களையும் அழைத்து மோகன் பகத் கலந்தாய்வு செய்தார். இக்கூட்டத்தில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் இயக்குநர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
காவல்துறை – மக்களைக் காக்கவா? அரசைக் காக்கவா? - - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 04 ஜூலை 2020 19:37 |
அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய புலவரின் பெயர் சாத்தனார் என்பதாகும். அத்தகைய புத்தரின் பெயரால் அமைந்த சாத்தன்குளம் என்னும் ஊரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு வணிகர்கள் சித்ரவதையின் காரணமாக உயிரிழந்த கொடுமை நிகழ்ச்சி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாத்தன்குளத்தில் மட்டுமல்ல நாடெங்கும் இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமையில் கௌதம புத்தரும் காந்தியடிகளும் பிறந்த நாடு என தம்பட்டம் அடிப்பதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது.
|
சனிக்கிழமை, 04 ஜூலை 2020 20:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
சோழர் – பாண்டியர் பேரரசுகளில் இசுலாமிய அதிகாரிகள் -பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2024 14:38 |
பிற்காலச் சோழர்கள் மற்றும் பிற்காலப் பாண்டியர்கள் ஆகியோரின் அரசுகளில் உயரதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும் முசுலிம்கள் பதவிகளை வகித்துள்ளார்கள் என்ற செய்தி பலருக்கு வியப்பை அளிக்கலாம்.
|
திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2024 14:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
அறிக்கை: எழுவர் விடுதலை! எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 23 மே 2021 18:23 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதை வரவேற்கிறேன்.
|
சுண்டெலி மிரட்டுகிறது – யானை பதுங்குகிறது - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013 16:11 |
‘காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.
|
செவ்வாய்க்கிழமை, 05 நவம்பர் 2013 16:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 132 இல் |