தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:04

தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்குமொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்

 
கனடாவில் "எழுக தமிழ்'' நிகழ்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:00

புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி டொரோண்டா நகரிலுள்ள அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் மாலை 5.30க்கு தொடங்கிய "எழுக தமிழ்'' நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வாக நடந்து முடிந்தது.

 
தமிழ்நாடு அமைந்த 60 ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 16:51

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
நவம்பர் முதல் நாள் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளாகும். சங்க காலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழி வழியாக தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம் வரை தமிழகம் ஒரே நாடாக இருந்ததில்லை.

 
உள்ளொளி பெருக்கிய தனிப்பெரும் கருணை முகம் "வள்ளலார் மூட்டிய புரட்சி' நூலுக்கு தீக்கதிர் நாளிதழில் வெளியான மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 16:56

மனித குலத்திற்கு உழைத்த பெரியோரை நினைக்கும்பொழுதே ஒரு மரியாதை கலந்த மலர்ச்சி முகத்தில் குடிகொண்டுவிடும். தாங்கள் வாழும் காலத்தில் மனித குலத்திற்கு பெரும் சேவை செய்தவர்கள் இவர்கள் சமூகச் சிந்தனை வளர்ச்சிக்கு உரம் இட்டவர்கள் இவர்கள். இத்தகையோர் தொடர்ந்து சென்ற வழி மூலம், முற்போக்குப் பாரம்பரியத்தின் தடத்தினை தெளிவாக அறிய முடிகிறது.

நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் தீர்க்கும் முகத்தான் அவர்கள் கண்டடைந்த வழியானது அடுத்து வரும் தலைமுறையினருக்கான சிந்தனைச் சொத்தாகும். மரணமிலாப் பெருவாழ்வைச் சிந்தித்த வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தமிழுக்கும், தமிழுலகு தழுவிய மனித குலத்திற்கும் கிடைதத மதிப்பிடற்கு அரிய மாணிக்கம் ஆவார். "வள்ளலார் மூட்டிய புரட்சி' என்கிற செறிவான நூலினை, பழ.நெடுமாறன் அவர்கள் இத்தகையதொரு கண்ணோட்டத்தில்தான் எழுதி இருக்க வேண்டும்.

தனது காலத்தின் வேண்டுதலை கவனத்திற்கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதாகவே தெரிகிறது.

28க்கும் மேற்பட்ட பல்வேறு நூல்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் திரட்டியதன் சாறாக இந்நூல் அமைந்துள்ளது. இது மட்டும்தான் என்று மதிப்பிட்டுவிட்டால் மிகப்பெரும் தவறாக முடிந்துவிடும். ஏனெனில் நூல்களில் உள்வாங்கிக் கொண்டவை நுட்பமாக அலசப்பட்டு 17 தலைப்புகளின் கீழ் எளிய தமிழில் தரப்பட்டுள்ளது. வள்ளலார் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஆங்கிலேயே கிழக்கிந்திய ஆட்சி வலுவாக தமிழகத்தில் காலூன்றி இருந்தது. மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. பொருளாதார, சமுதாயச் சிக்கல்களோடு சமயப் பூசல்களாலும் வருண, சாதி வேற்றுமைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் மக்கள் சிக்கித் தவிர்த்தனர். இதனைக் கண்டு பொறாத வள்ளலார்அவர்கள், நால் வருணம், ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலை சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே'' என்று பாடினார். தாழ்த்தப்பட்டு, வறுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த மக்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காலத்தில் சகலரும் ஒன்றுகூடி வழிபடக்கூடிய சத்திய ஞானசபையை அமைக்கிறார். "செல்வம் உடையவர்கள் அளவுக்கு மேலும் உண்ணுகிறார்கள். வறியவர்கள் மிகுந்த பசியினால் உடல் வருந்துகிறார்கள். இதைப்பற்றி நினைக்கவே என்னால் முடியவில்லை. என் உடம்பும் எரிகின்றது'' என்று பாடிய வள்ளலார் அவர்கள் சத்திய தருமசாலையைத் தோற்றுவிக்கிறார்.

1823இல் பிறந்து 1874 வரை வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் உயிர் இரக்கக் கோட்பாட்டினை மிகச் சரியாக வெகுவாக சிலாகித்துப் பெருமிதப்படுகிறது இந்நூல். உயிர்கள் யாவும் சமம் என்று உணர்ந்து செயல்பட்டவர். சீவகாருண்ய ஒழுக்கம் பற்றிப் பேசி ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை வளர்த்தவர். எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார, சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்'' எனக் தொழுகிற கருணை முகத்தை நம்முன் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர்.

திருமூலரையும் மற்றும் பல சித்தர்களையும் பின்பற்றியே வள்ளலார் தமது புதிய சன்மார்க்க நெறியை உருவாக்கியுள்ளார். இதற்கு பொருத்தமானத் தரவுகளை முன்வைக்கிறது இந்நூல். "பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி" என்று பாலின சமத்துவ இயல்பைப் பாடுகிறார் வள்ளலார். தெய்வம் பலபல சொல்லிப் புகைத் தீயை வளர்ப்பவர் மூடர் என்று பாடிய பாரதியை மட்டுமா வள்ளலாரின் கருத்துக்கள் ஈர்த்தது! கேரளத்துச் சான்றோர் பெருமக்களிடமும் அவரது தாக்கம் இருந்தது. சட்டம்பி சுவாமிகள், நாராயணகுரு சுவாமிகள் போன்றோர் சமரச சன்மார்க்கத்தை தங்கள் மண்ணிலும் கொண்டு சென்றனர் என்று பெருமையோடு விவரிக்கிறது இந்நூல், அருட்பா-மருட்பா வழக்கைக் கூறும் அதே நேரத்தில் முத்தாய்ப்பாக உயர்நீதிமன்ற நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் 24-03-2010 அன்று அளித்த உன்னதத் தீர்ப்பும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் முடிவுகளை நூலாசிரியர் இணைத்த விதமும் அதற்காகத் தேர்ந்தெடுத்த அத்தியாயமும் மிகவும் பாராட்டுக்குரியது.

இருள் கடிய எழுந்த ஞாயிறு என்று துவங்கிய வள்ளலார் உருவாக்கிய அமைப்புகள் இந்து சமய நிறுவனங்கள் அல்ல என்பதோடு நிறைவு செய்கிறது இந்நூல். ஊரன் அடிகள், திரு.வி.க., மறைமலை அடிகள், ம.பொ.சிவஞானம், சாமி. சிதம்பரனார் போன்றோர் தங்களது தலைமுறைக்கு வள்ளலாரைக் கொண்டு சேர்த்த உணர்வை இந்நூலாசிரியர் ஏந்தியுள்ளார் எனத் தெரிகிறது. மக்கள் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் ஆன்மீகவாதிகளும், பொதுவுடைமைவாதிகளும், சமூகச் சீர்திருத்தப் பகுத்தறிவாளர்களும் உயர்த்திப் பிடிக்கிற இராமலிங்க அடிகளாரைப் பற்றி எளிய தமிழ் நடையில் தந்துள்ள இந்நூலாசிரியரைப் பாராட்டுவது பொருத்தமானதே.

நன்றி : தீக்கதிர் 23-10-2016

 
சங்க கால நகர்ப்புற நாகரிக முதல் தடயம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:11

தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணம், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 101 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 41 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்