மறைமலையடிகள் தொடக்கிய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு-தமிழர்களே திரண்டு வருக! |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 16:00 |
தமிழக வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களிலும் பலர் தோன்றித் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்த இடுக்கண்களிலிருந்து காத்து மீட்டுள்ளனர்.
சங்க காலத் தமிழர் சமுதாயத்தில் பல்வேறு சீர்கேடுகள் மலிந்திருந்தன. கூடா ஒழுக்கம், பிற உயிர்களைக் கொல்லுதல், புலால் உண்ணல், கள் அருந்துதல், சூது விளையாடுதல், பிறனில் விழைதல், வரைவின் மகளிர் போன்ற பண்பாட்டுக் கேடுகள் பரவித் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்த காலக் கட்டத்தில், தமிழர்களைச் சீர்திருத்த திருவள்ளுவர் தோன்றினார். கூடா ஒழுக்கம், கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, சூது, பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் போன்ற அதிகாரங்களை இயற்றித் தமிழர்களுக்கு அறிவுறுத்திச் சீர்திருந்தச் செய்தார். வள்ளுவர் யாத்த குறள் தமிழர்களை நன்னெறிப்படுத்தியது.
|
|
தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு மலர் |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:53 |
தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு மலர் மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றம், வரலாறு, போராட்டங்கள், பங்கேற்ற தமிழறிஞர்கள், பாவலர்கள் ஆகியோரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், பாக்கள் பழைமைச் சிறப்பு வாய்ந்த படங்கள் அடங்கிய தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொன்மலர்
|
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 00:00 |
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு - உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், (பழைய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சை.
|
|
தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை! - பாவேந்தர் பாரதிதாசன் |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:51 |
வாணிகம் தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்கிலமா வேண்டும்? வானுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
|
சமற்கிருதப் பிடியிலிருந்து தமிழை மீட்டார் மறைமலையடிகள் - ஆங்கில ஆளுமையை அகற்றிவிட அணி திரள்வோம்! |
|
|
|
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:31 |
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் மொழியையும், பண்பாட்டையும் அழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த இனம் சிறிது சிறிதாக மறைந்தே போகும்.
தொல்காப்பியர் காலத்தில் தொடங்கி நமது தமிழை அழிக்க வடமொழி இடைவிடாமல் முயன்று வந்திருக்கிறது. சங்க நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவு. சங்க காலத்தையொட்டி தொடர்ந்த காலக் கட்டத்தில் தமிழில் கலக்கப்பட்ட வடமொழி சொற்களின் தொகை நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே வந்து மணிப்பிரவாள நடையாக மாறி 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் நூற்றுக்கு 70 சதவிகிதத்திற்கு மேல் வடசொற்கள் கலந்து செந்தமிழின் சிறப்பைச் சிதைத்துவிட்டன.
|
|
|
|
|
பக்கம் 108 - மொத்தம் 132 இல் |