ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.
கடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.
|
|
மாற்று அரசியல் ஏமாற்று அரசியலாகி விடக்கூடாது தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:48 |
தமிழ் நாட்டில் கடந்த 45 ஆண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இலஞ்சம், ஊழல், இயற்கை வளங்கள் கொள்ளை, சனநாயக உரிமைகள் பறிப்பு போன்றவை தலைவிரித்தாடியதன் விளைவாக இரு கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளன. தமிழகத்தில் பணநாயகமும், பதவி நாயகமும், சந்தர்ப்பவாதமும், அதிகார போதையும் கைகோர்த்து சனநாயகத்தை வீழ்த்த முயலுகின்றன. துன்பம், தொண்டு, தியாகம் ஆகியவற்றை பொது வாழ்வின் குறிக்கோள்களாக கொண்ட நிலை மாறி பதவிவெறி, அதிகார மமதை, ஊழலில் திளைத்தல் என்பவை குறிக்கோள்களாக மாறிவிட்டன.
|
9 ஆண்டு காலமாக சிறப்பு முகாமில் வாடும் தமிழர்கள் விடுதலை செய்யுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:41 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.
|
|
பொறுப்பான ஆளுங்கட்சியும் விழிப்பான எதிர்க்கட்சியும் தேவை - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:44 |
சென்னை மாகாண சட்டமன்றம் இந்தியாவில் உள்ள பிற மாகாணங்களின் சட்ட மன்றங்களுக்கு முன்மாதிரியாகவும் எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது. இச்சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல் பதவி வகித்தார். இச்சட்டமன்றத்தில் அமைச்சர்களாக இருந்த வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள் பிற்காலத்தில் குடியரசுத் தலைவர்களானார்கள். பின்னர் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவர் ஆனார்.
|
ஓவியக் கலையில் சாதனைப்படைத்த சந்தானம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:39 |
தமிழர்களின் எடுத்துக்காட்டாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொன்மையான யாழ் மற்றும் பஞ்சமுக வாத்தியம் போன்ற இசைக் கருவிகள், செட்டிநாட்டு சிற்ப வேலைப்பாடுகள், அழிந்து கொண்டிருக்கிற தோல்பாவை கூத்துக்களின் வடிவங்கள் ஆகியவற்றுடன் தமிழர்களின் அழிந்துவிட்ட, அழிககப்பட்டு வரும் மரபு சார்ந்த வண்ணங்களையும் அனைவரும் விரும்பும் வகையில் நவீன உத்திகளோடு ஓவியங்களிலும் வெளிப்படுத்தி வருபவர் ஓவியர் வீர. சந்தானம். நடிகர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு திடீரென சுயநினைவற்று, ஒரு மாத காலம் கோமாவில் கிடந்தவர் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையமான "தக்ஷின் சித்ரா' இவரைப்பற்றி "காமதேனு' என்ற குறும்படத்தை தயாரித்ததுடன், இவரது படைப்புகளைக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சி குறித்தும் - அவர் கடந்து வந்த வாழ்க்கை குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
|
|
|
|
|
பக்கம் 103 - மொத்தம் 121 இல் |