தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு காவிரி கரைபுரண்டதென திரண்டனர் மக்கள் தஞ்சையில் எங்கும் எழுச்சி - உணர்ச்சிப் பேரூரைகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:45

நாள் திருவள்ளுவராண்டு 2047, ஆடவை (ஆனி) 31 கடகம் 1, 2 (2016 சூலை 15, 16, 17)
இடம்: அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், தஞ்சை. 15-7-2016 பிற்பகல் 3 மணி மங்கல இசை முழங்க மாநாடு தொடங்கியது. உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டது.

5.15 மணிக்கு புலவர் கி.த. பச்சையப்பன் உலகத் தமிழர் பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். 5.30 மணிக்கு வரவேற்புக் குழுத் தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் வரவேற்புரை யாற்றினார். இராமன் தனித் தமிழ் இயக்க நூல்கள் - இதழ்கள் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
16-7-2016 காலை 10.00 மணிக்கு மங்கல இசை முழங்கியதை அடுத்து உலகத் தமிழர்பண் இசைக்கப்பட்டது.

 
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா மற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு தீர்மானங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:40

தீர்மானங்கள்

1. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பிக்கும் திட்டம் நமது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அழிக்கும் திட்டமாகும். முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியே அளிக்கப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், தமிழ் மொழிக் கல்வி படிப்படியாகக் கல்லூரிக் கல்வி வரை விரிவாக்கப்படவேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் தாய்மொழிக் கல்வித்திட்டம் செயற்படுத்தப் படுகிறது. அதற்கு  மாறாக, தமிழ்நாட்டில் செயல்படுவது நமது மாணவர்களின் எதிர்காலத்தை அழிப்பதில் போய் முடியும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

 
தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு மலர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:53

தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு மலர்
மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின்
தோற்றம், வரலாறு, போராட்டங்கள், பங்கேற்ற தமிழறிஞர்கள், பாவலர்கள்
ஆகியோரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், பாக்கள்
பழைமைச் சிறப்பு வாய்ந்த படங்கள் அடங்கிய
தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொன்மலர்

 
மறைமலையடிகள் தொடக்கிய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு-தமிழர்களே திரண்டு வருக! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 16:00

தமிழக வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களிலும் பலர் தோன்றித் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்த இடுக்கண்களிலிருந்து காத்து மீட்டுள்ளனர்.

சங்க காலத் தமிழர் சமுதாயத்தில் பல்வேறு சீர்கேடுகள் மலிந்திருந்தன. கூடா ஒழுக்கம், பிற உயிர்களைக் கொல்லுதல், புலால் உண்ணல், கள் அருந்துதல், சூது விளையாடுதல், பிறனில் விழைதல், வரைவின் மகளிர் போன்ற பண்பாட்டுக் கேடுகள் பரவித் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்த காலக் கட்டத்தில், தமிழர்களைச் சீர்திருத்த திருவள்ளுவர் தோன்றினார். கூடா ஒழுக்கம், கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, சூது, பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் போன்ற அதிகாரங்களை இயற்றித் தமிழர்களுக்கு அறிவுறுத்திச் சீர்திருந்தச் செய்தார். வள்ளுவர் யாத்த குறள் தமிழர்களை நன்னெறிப்படுத்தியது.

 
தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை! - பாவேந்தர் பாரதிதாசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:51

வாணிகம் தம் முகவரியை
வரைகின்ற பலகையில்
ஆங்கிலமா வேண்டும்?
வானுயர்ந்த செந்தமிழால்
வரைக என அன்னவர்க்குச்
சொல்ல வேண்டும்!

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 105 - மொத்தம் 130 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 67 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்