தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
சுமேரியர் பழந்தமிழரே - முனைவர் கீரைத் தமிழன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:05

வேர்களைத் தேடும் நமது பயணம் - நாம் இழந்தவைகள் இத்தனைதானா? அல்ல இன்னும் எத்தனையோ? என்ற ஏக்கத்தையும், பதைபதைப்பையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை! சுமேரியரைக் கடந்து வேறு நாகரிகங்களுக்குள் செல்லலாம் என்றால் உலகின் முதலும் முதன்மையுமான நாகரிகத்தைத் தந்த சுமேரியர்கள் "இன்னும் இன்னும் எங்களை எழுதுங்கள், நாங்கள்தான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்'' என்று சொல்வது போல் என் மனக்கண்ணில் வந்து நின்று என்னை எழுதத் தூண்டுகிறது, நான் என்ன செய்ய? சரி உலக நாகரிகங்களுள் சற்றேறக்குறைய முழுமையாக வாசிக்கப்பட்டு வரலாறுகள் அறியப்பட்ட நாகரிகம் என்று சொன்னால் அது சுமேரியர் நாகரிகந்தான்.

 
"வரையா மரபின் மாரி'' ஓய்ந்தது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:03

கெழுதகை நண்பர் நா. அருணாசலம் அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பாகும். இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. தமிழும் தமிழரும் தொய்வடைந்த காலக்கட்டங்களில் உணர்வும் ஊக்கமும் நிறைந்த தமிழர் ஒருவர் தோன்றி அந்தத் தொய்வை அகற்றித் தமிழையும் தமிழரையும் நிமிரச் செய்வர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகள் தோன்றி வடமொழி என்னும் முதலை வாயில் சிக்கிய தமிழை மீட்டார். தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

 
திருப்பு முனையான தேர்தல் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:51

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுமுனைப் போட்டி ஏற்பட்டது. அது அதிமுகவுக்கு நல் வாய்ப்பைத் தந்தது. தமிழகக் கட்சிகளில் அதிகமான மற்றும் நிலையான வாக்கு வங்கியையுடைய கட்சி அதிமுக. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுப்பட்ட நிலையும், கடைசி நேரத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களை ஈர்த்ததும் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

 
வழக்கறிஞர்களின் போராட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:00

நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் மோதிக் கொள்ளும் வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.

 
தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:48

தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 110 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 12 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்