தமிழர் தேசிய முன்னணி கட்சித் தேர்தல் |
|
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:32 |
அன்பார்ந்த தோழர்களே!
நமது தமிழர் தேசிய முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை 31-08-2016 அன்றோடு நிறைவடைகிறது என்பதை அனைவரும் அறிவோம். செப்டம்பர் திங்களில் கீழ்க்காணும் நாள்களில் ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தல் நடத்தப்பெற வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முறையாக அறிவிப்புச் செய்து குறைவேதுமின்றி தேர்தலை நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலைத் தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் நடக்கும் இடம், முகவரியினை முன்கூட்டியே தலைமைத் தேர்தல் அலுவலருக்கும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்
|
|
மனுநீதிச் சோழன் திகைக்கிறான்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:29 |
நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், நீதியைக் காண அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டு கடந்த 60க்கும் மேற்பட்ட நாட்களாக தமிழ்நாட்டில் எந்த நீதிமன்றமும் செயற்பட முடியாத வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.
|
சத்தமே இல்லாமல்... - தமித்தலட்சுமி தீனதயாளன் |
|
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:23 |
கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக தந்தைக்குள்ளே தாயாகி தாலாட்டு பாடினாய்! சிந்தையெல்லாம் தமிழாகி கவிதை கூட்டினாய்!
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:25 |
<ஈழத் தமிழினப் படுகொலை (பதிப்பாசிரியர் - நடுநல்நாடன்) மறதி என்ற நோயுடன் நம் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், பதிப்பாசிரியர் நடுநல்நாடன் அவர்கள் 2011ஆம் ஆண்டு அன்னை முத்தமிழ்ப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட புத்தகம்தான் இந்த "ஈழத் தமிழினப் படுகொலை' என்னும் நூல். இது ஈழத்தில் நடந்த தமிழ் இன அழிப்புப் பற்றி, ஆதாரங்களுடன் பல பதிவுகள் செய்த ஐ.நா. நிபுணர்களின் குழு அறிக்கையின் முக்கியப் பகுதிகளைக் கொண்டதாகவும், அவர்கள் கொடுத்திருந்த முடிவுகள், பரிந்துரைகள் பற்றிய பதிவுகளை தொகுத்துக் கொடுத்தும், மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களையாவது காப்பாற்ற முடியுமா? என்ற ஏக்கத்தையும், கலக்கத்தையும் நம்மிடம் காட்டியுள்ளார்.
|
உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆவது மாநாடு முனைவர் செ.வை. சண்முகம், பேரா. செ.வைத்தியலிங்கன், முனைவர் சோ.ந. கந்தசாமி, முனைவர் இராம. சுந்தரம் உலகப் பெருந்தமிழர் விருது பெற்றனர்! - பா. இறையெழிலன் |
|
|
|
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:40 |
உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு மூன்றாம் நாள் முற்பகல் மங்கல இசை முழங்கப்பட்டது. அடுத்து உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டு விழா தொடங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி வரவேற்புரையாற்றினார்.
|
|
|
|
|
பக்கம் 106 - மொத்தம் 132 இல் |