தனியரசு மீது தாக்குதல் : பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 12 நவம்பர் 2009 15:20 |
கொங்கு இளைஞர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் தனியரசு அவர்களும் அவரது தோழர்களும் தி.மு.க. கழகத்தைச் சேர்ந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு கரூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈழத் தமிழர் பிரச்சினையிலும் மற்றும் தமிழர் பிரச்சினைகளிலும் உணர்வுப் பூர்வமாக ஈடுபட்டு தொண்டாற்றி வருபவர் தனியரசு. சனநாயகக் கடமையை ஆற்றிவரும் அவரை பாசிச முறையில் ஒடுக்கிவிடுவதற்கு முயற்சி செய்யும் தி.மு.க.வினரின் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். |
|
கேரளத்தின் காலம் கடத்தும் தந்திரத்திற்கு தமிழகம் சம்மதித்தது ஏன்? |
|
|
|
புதன்கிழமை, 11 நவம்பர் 2009 18:20 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் அடங்கி இருப்பதால் இதுகுறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஆயம் விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.
|
ஈழ ஆதரவு கூட்டத்துக்குத் தடை - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2009 17:48 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை அமெரிக்க மனித உரிமை போராளியான மருத்துவர் எலின் ஷான்டர் அவர்களை அழைத்து தமிழகத்தில் சில கூட்டங்களில் பேசவைப்பதற்கு திட்டமிட்டோம். ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான ஈடுபாடு காட்டி வரும் அவர் பேசினால்
|
|
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி |
|
|
|
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 17:49 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். மறைந்த தனிநாயகம் அடிகளார் அவர்களின் பெருமுயற்சியின் விளைவாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து தமிழின் ஏற்றத்திற்கு வழிகாணவும் இந்த அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாநாடுகளில் அரசியல் கலப்பு என்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது.
|
வரலாறு தெரியாமல் பேசவேண்டாம் - ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 17:47 |
ஈழத்தமிழர் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்கவேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையை வரவேற்கிறேன். ஆனால் அதில் தேவையற்ற வகையில் விடுதலைப் புலிகளைக் குறை கூறியுள்ளார். "தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களைக் கொலை செய்து வருகிற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என்றைக்கு மாறியதோ அன்றிலிருந்து அந்த இயக்கத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.
|
|
|
|
|
பக்கம் 33 - மொத்தம் 44 இல் |